Showing posts with label புலம். Show all posts
Showing posts with label புலம். Show all posts

Wednesday, July 7, 2021

புவியீர்ப்புக் கட்டணம்


புவியீர்ப்புக் கட்டணம்


கடிதத்தை உடைக்கும் போதே அவனுக்குக் கை நடுங்கியது.அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். 

இது மூன்றாவது நினைவூட்டல், மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. 

இப்போது, உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை, அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை புவியீர்ப்புத் துறை உண்டாகியிருக்கவில்லை . 

'அம்மையே! 

சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?

புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'

'நீங்கள் யார் பேசுவது? 

'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன். 

'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை? 

இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொரு முறைபரிசீலிக்க முடியுமா?

'இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன் சென்ற மாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். 

ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்குத் திடீரென்று என்ன நடந்தது

"என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது. 

அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே?. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்


'அம்மையே, உங்கள் கையேடு மகா மிகவும் பாரமாக உள்ளது எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஒடி விடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.


புரியாதது எப்படி அநியாயமாகும். நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல் வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?

அம்மையே புவியிப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ஆதியிலிருந்து அது இருந்து கொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கூட இருந்திருக்கிறது என்று சொல்கிறார்களே. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. 

இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால் எப்படி?

ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்குத் தோன்றவில்லை? 

தண்ணீரை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்கவதற்கு அனுமதிக்கிறோம். 

சமையலுக்கு வாயு தருகிறோம். மின்சாரம் தருகிறோம். எல்லாவிதக் கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். 

ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், யோசித்துப் பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம் வாழ முடியுமா? 

கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாட முடியுமா? 

ஒன்றுக்குப் போவது போல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?


அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவை யெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால், உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?

அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்புக் கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் அதனை முற்றிலும் பயன்படுத்தியும் அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும்….

அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்தத் துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன் எனக்கு தேசப்பற்றும் பூமிப்பற்றும் புவியீர்ப்புப் பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.'

'வணக்கம். 

'ஹலோ .' 

'ஹலோ .'

அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?' 

'நான்தான், சொல்லுங்கள்?

ஐயா, நான் புவியீர்ப்புத் துறையிலிருந்து பேசுகிறேன். 

நீங்கள், கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'

'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்ட முடியாது என்று சொல்லவில்லையே, எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டி விடுவேன்.'

'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை பத்தாது, நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்குத் தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? 

இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.

 "சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.'

மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்….

'சொல்லுங்கள்….

'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டு வருகிறதே. அது ஏன்?

நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்க வில்லையா?

'இல்லை , அம்மையே.'

அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். 

புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார் உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'

'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'

'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'

'நீங்கள் எல்லை மீறிப் பேசுகிறீர்கள்?'

'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்குக் காரணம் கூறினேன். இந்தத் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையைக் கணிசமாகக் குறைத்து விட்டார்களே .'

அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்குத் தெரியும்?.

'நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். 

உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்தத் தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'


'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்குப் பயணம் போயிருந்தோம். அதற்குக் கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன் படுத்தவில்லையே?


ஐயா. இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்ககிறது.  உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக் கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்தத்தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. 

நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்குச் சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தைச் செலுத்திவிட்டோம். 

இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.'

நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னைத் திக்கு முக்காட வைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'

'சரி, கேளுங்கள்.'

'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா ?' 

இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்க முடியுமா? 

இப்பொழுது செவ்வாய் கிரகத்தைத்தாண்டி அல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'

'மன்னியுங்கள். என்னுடைய மூளையைப் பிரகாசிக்க வைத்து விட்டீர்கள். இன்றே புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டி விடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'

'முதலில் செய்யுங்கள்.'

 'ஹலோ '

'ஹலோ

ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.'

அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் வைத்துக் கொண்டு இல்லையென்கிறேனா? 

காற்று வரி "வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர்க் கட்டணம் கட்டினேன் ,மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'

அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் பணத்தைக் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.'

"அதன் காரணம் உங்களுக்குத் தெரியும்தானே "

இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.


மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்து விடுவார்கள். தண்ணீர்க் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்புக் கட்டணம். கட்டாவிட்டால் அதைத் துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.'

'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்தத் துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?"

'நீங்கள் என்னுடைய நாலாம் வகுப்பு உபாத்தினிபோல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'

'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?"

'அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'

'சரி, துர்தேவதைகள் போன பிறகு பேப்பரைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'

'அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்க முடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'

'செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்புக் கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'

அப்படியா?

'அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை., ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக் கூடாது என்று தீர்மானித்தோம்.'

பிறகு என்ன நடந்தது?'

அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கி விட்டோம். மனிதர் ஒரு தடவை பூமியைச் சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்து விட்டார்.. 

திரும்பவும் அவரைப் பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'

'உண்மையாகவா!

மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால், ஒரு பிரச்சினை?

'அது என்ன ?'

'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு விண்வெளி உடையின் விலை, இன்ன பிற செலவுகளை மாத மாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டி முடித்து விடுவார்.

2196 மாதங்களா? 

'ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.

'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'

'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவை கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'

'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.''


'ஹலோ .'

'ஹலோ '

'உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டி விடுவதாக புகழ்கிறார்கள்.'


'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே! 


'நான்தான் பூமிப்யணத்துறையில் இருந்து பேசுகிறேன் 

இது என்ன புதுத்துறையா?' 

என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்று கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.

'என்ன கட்டணம்?'

பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்குத் தெரியும். ஒருமுறை பூமி சூரியனைச் போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள். இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல், இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.

அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும் போதே புல்லரிக்கிறது.

முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள் பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்,


'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பி விடுகிறேன். 

ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?

இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.

'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்குப் பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'

'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'

 'அப்படியா, சொல்லுங்கள்.'

'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால், நாங்கள் கட்டணத்தைக் கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.'

'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லா விடில் புள்ளி விழாத சிவந்த ஆப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும் போதே மனம் புளகிக்கிறது. அம்மையே,

பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிகக் கட்டணம் கட்டலாம் அல்லவா?

பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்குத் தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது, அளவுக்கு அதிகமான பொதி கொண்டு போனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'

'உதாரணமாக?

பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்ட வேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது

அம்மையே, உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பி விடுவேன்.'

'நல்லது. அது என்ன சத்தம்?' 

'ஒன்றுமில்லை . பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்

'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தைக் கட்டிவிடுங்கள்.'

‘உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சிதரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று"

'என்ன ?'

'நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்த பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது, சின்னஞ்சிறு சுற்றும் என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனே கட்டிவிடுகிறேன்.'

'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'

'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. 

அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை !

அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்



Monday, July 5, 2021

கச்சி ஏகம்பனே

உன்மத்தராயிருந்தோம்


"கச்சி ஏகம்பனே”

முறையிட்டுக்கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.

ஏகம்பனாம், ஏகம்பன்!

பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய, மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு 'கச்சி ஏகம்பனே' என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?

சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்!

கள்ளிப் புதரும் கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஓரிடமும் இல்லையா? இருந்தால் அதற்கு முறையிடும்! உம்முடைய கண்ணீரை அதற்குச் சொரியும்!

விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது - எல்லா ஆண்களையும்போல; ஆனால், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் - அவள்தான் சரசா - அவளுடைய மனசை ஒருகணமாவது அறிய, அறிய முற்பட, முயன்றிருக் கிறீரா?

கை கூசாமல் பேனாவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனால், இதை அவள் - அந்தப் பட்டுப் போன்ற உடலைப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் - பார்க்க நேரிட்டால்...!

நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?

சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்தபோது, நான் திடுக்கிட்டு விட்டேன்.



இப்படியும் ஓர் அழகா! சாதாரண புடவைதான் உடுத்தியிருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை, முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அந்தச் சாதாரண சேலை.

அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.

அந்தக் கண்கள் - அந்த நீல விழிகள் - அதன் விலை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. நிலமகள் ஒருத்திதான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.

பாவம், அவளுக்கு எப்போதுமே சேலை உடுத்தத் தெரியாது சிறு பெண்தானே!

'சடக், சடக்' என்று சேலை சத்தம்போட வெகு சிரமத்துடன் அவள் நடப்பாள்.

சிறு குழந்தைகள், 'குறு குறு'வென நடை பழகும்போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினால் அள்ளி அணைத்துக் கொள்வோமே, அத்தகைய வேட்கைதான் அவள் நடையைக் காணும் போதெல்லாம் தோன்றும்.

அந்தச் சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங்கள் அந்தப் பாதங்களின் கீழ் துடித்தவண்ணம் நசிகின்றனவோ என்று நான் வியப்பதுண்டு.

பொறாமை யாரைத்தான் விட்டது!

"சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறாள் போல இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறை யிட்டபோது நான் திகைத்து விட்டேன்.

சரசாவா? என்னால் நம்பவே முடியவில்லை.

ஆனால், அன்றிரவு, அந்தப் பாவ காரியத்தை நான் செய்ய வேண்டியதாகிவிட்டது.

மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே வந்தாள். அவள் கையிலே கனத்த சூட்கேவஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.

“மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?”

"சரசா... விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. பிரின்சிப்பல் 'கூட 'டிஸ்மிஸ்' பண்ணும்படி உத்தரவு கொடுத்து விட்டார். எனக்கும்தான் பரிதாபமாக இருந்தது. ஆனால், நான் என்ன செய்ய முடியும்!”

"மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?”

“என்னை விரும்பினார் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. 'குற்றம்' என்று உணர்ந்த பின்புகூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் நடந்துகொண்டோம்.

“மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்குப் பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என்னைப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள்...''

“ஆனால்... யோசித்துப் பாருங்கள் மிஸ்... நாளைக்கு சமு தாயத்தில் என்னை , காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக நடத்தப் போகிறார்களே, அது பரவாயில்லையா?”

"நீங்களும் ஒரு பெண்தான், உங்களைவிட யார் என் குறையை நன்றாக உணர முடியும்?"

அவள் கடைசியாகக் கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது!

"குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட்டதுதானா பள்ளிக்கூடம்? அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவல்லவா?"

நான் என்ன பதில் கூற முடியும்? "சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி நடந்தது?”

வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினாள் அவள்.

நான்தான் திணறிப் போனேன்.

“மிஸ், நான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை ... ஆனால், இன்னும் மூன்று நாட்கள்... மூன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?”

அவள் விம்மி விம்மி அழுதாள்.


இதோ... இந்த 'ஸ்வெட்டர் இதை எதற்காகப் பின்னுகிறாய்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறீர்கள்; நான் மறைத்துவிட்டேன். அவருடை பிறந்த தினம்.அது இன்னும் மூன்றே நாளில் வருகிறது.ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைக் இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?"

"இனிமேல் நான் அவரை எப்படிக் காண்பேனோ?” என்று அவள் விம்மிய போது என்னால் அவளைத் தேற்றக்கூட முடிய வில்லை .

நர்ஸ் படிப்புக்குப் போனாலும் அவள் என்னை மறந்துவிட வில்லை . அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம்...

“எதிர்காலம் இருள்; மனதிலே இருள்; வழியிலே இருள்; என் தந்தை முகத்தில் எப்படி விழிப்பது!

“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவது போன்று படலைக் காலைத் தள்ளினேன்.

“வாசல் திண்ணையிலே என் தந்தை - அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர் - சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரெண்டு வயதே ஆன என் அருமைத் தங்கை. அக்கா படிக்கவேண்டுமென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி - அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

"சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டபடி கைகளை என் பக்கம் நீட்டித் தடவினார்.

"ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய நெஞ்சம் சுக்கு நூறாகச் சிதறி நான் மாண்டு போகவில்லை?

"மூன்று மாதத்தில் சரசாவும் ஒரு நெசவு ஆசிரியை ஆகி விடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்” என்று இரவும் பகலும் கனவு கண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் - வெட்கமில்லாமல் - என் குற்றமெல்லா வற்றையும்


"அடித்து உதைத்திருந்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்

“கையிலே பிசைந்து கண்ணீர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி - அதையும் சகித்தேன்.

"என் தங்கை - அந்தச் சிறுமி - காரணம் விளங்காமலே என் கால்களைக் கட்டி அழுதபோது - அதையும் அந்தச் சிறுமி யின் விலையில்லாத கண்ணீரையும் சகித்தேன்!

"உயிரைப் போக்கிக்கொள்ள எனக்குத் தெரியாமலில்லை. ஆனால்... ஆனால்.....

"கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயுகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களை நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

"ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திரனை எட்டிப் பார்ப்போம்.

"கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகலவென்று காரணமின்றிச் சிரிப்போம்.

"திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக்கொள்வார். வானத்து நட்சத்திரங்களையெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார்.

"அந்த வானத்து மீன் மேலும், பூரண சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.

“உறுதிகள் கோடி செய்தோம்.

 "உன்மத்தராயிருந்தோம். 

"ஆமாம் - உன்மத்தர்தாம்.

"இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் நட்சத்திரக் கூட்டங்களும், இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக் கொண்டு கிடக்கின்றன?

"ஓ நட்சத்திரமே, நீ அவருடைய உறுதிமொழியை இன்னமும் நம்புகிறாயா?

“ ஏ,பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட----?“


"அந்த ராஜு - இந்தப் பேதையை மறந்துவிட்டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனோ உலகத்து அவதூறுகளையெல்லாம் எவருக்காக ஏற்றுக்கொண்டேனோ, அவருக்கு 'சரசா' என்பவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?

"கண்ணீரால் நான் வரைந்த அத்தனை கடிதங்களுக்கும் அவர் பதிலே எழுதவில்லை .

"காரணம் என்ன தெரியுமா? 

"மிஸ், எழுதவே கைகூசுகிறது.

"எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப் படுகிறாராம். ஊரிலே என் பெயர் கெட்டுப்போய்விட்டதாம்.

"ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக்கூடியதா?”

பயிற்சி முடிந்ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனிமேலாவது அவள் அவனை மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மையிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும்கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன செய்தி.....

"நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில்.... இத்தனை நாளில், என்னை ஒருமுறைகூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை . நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். நான் வேறு என்ன செய்ய முடியும்?”

"அவர் ஆண்! நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப்பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா, சொல்லுங்கள் மிஸ்!"

அவள் விசித்து விசித்து அழுதாள்.

என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினாள்.

என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக்கொண்டு 'இந்த விரல்களின் ஸ்பரிசத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா' என்று கூறியவர் கேவலம் இரண்டரை வருடத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?"

இன்னொரு நாள் வியர்க்க, வியர்க்க அவள் வந்திருந்தாள்.

"ஏது இந்த நேரம்?" என்றேன். 

“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று

மாற்றலாகிப் போகிறார்; அவருக்குப் பிரியா விடை நடநதது. இடையிலே வர முடியவில்லை" என்று கூறிவிட்டு, பெரியதொரு பெருமூச்சு விட்டாள்

தேர்தல் சமயம் அது; ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்பது,பத்து

அப்பரேஷன் கேஸ்களாவது வந்தவண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஓய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர் கூட லீவு போட்டுவிட்டார்.

இரவு ஒருமணி இருக்கும். பதினொராவது ஆப்பரேஷன் நடந்து கொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ்வொன்றாக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த்திருந்தது. கடமையைச் செய்ய வேண்டுமென்று ‘லின்ட்' துணியினால் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.

ஏனோ விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டுக் கூர்மை யான பார்வை ஒன்றை வீசினார் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒருகணந் தான்! ஒருவருமே பார்க்கவில்லை.

சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்றுதான் அந்த "டோம்' விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம்கூடத் தயங்கவில்லை. தான் இன்னொருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை . அவள் நினைத்திருந்தால்... ஒரு உதட்டின் அசைவிலே... ஆனால், அவள், அதை விரும்பவில்லை.

இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?

ஆனால் அவளுக்கு, அதை விளம்பரம் செய்யத் தெரியவில்லை. பெண் பேதையென்பதற்கிணங்க, நம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

வழக்கம்போலப் பருத்தித்துறை பஸ் அவளைக் கவ்வியங் காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து



அவள் வீடு வெகு சமீபத்தில்தான் இருந்தது. செங்குந்தான் பாட சாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப்போனால் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனால் அந்தப் பூனைக்கண் இரட்டையர்களின் கடை வாயில் அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.

அதை அவள் கடக்கும் போதெல்லாம் 'விசில்' சப்தமும் விரசமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பிவிடும் சரசாவுக்கு.

இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கிலியன் தோப்பு தென்கோடிப் பக்கமாகப் போவாள்.

அன்றும் அப்படித்தான்.

பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிராக சைக் கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒருகணம் 'திக்' என்றது.

அவன்தான். ராஜுதான்.

சந்தி கழித்து அவன் சமீபமாக வரும்வரைக்கும் படக் படக் கென்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ண க் குமுறல்கள். 'எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப்பார், யாராவது பார்த்து விட்டால், ' என்ன எண்ணங்கள் அவளை நிறைத்தன. நடையைத் தளர்த்திக்கொண்டு ஆசையோடு நின்றாள்.

இதோ ராஜு வந்து விட்டான். உற்றுப் பார்க்கிறான்' என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக் கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.

ஆனால், அவன் நிற்கவில்லை. போயே போய்விட்டான்!

அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து. சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாகவல்ல; பின்சீட்டில், பீடி குடிக்கும் ஓர் அருமையான நண்பனை ஏற்றிக்கொண்டு.

"உன்னை நான் அடையாளம் கண்டுவிட்டேன். இருந்தும் என் மன உறுதியைத் தளரவிடவில்லை . பார்த்தாயா? பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரைகுறை சிரிப்பில் இவ்வளவு வஞசனை எப்படி ஒட்டிக்கொண்டது?

சைக்கிள் மின்வேகத்தில் அவளைக் கடந்தபோது “நேர்ஸ் உடுப்பிலை சோக்காயிருக்கடா!” என்று அந்த அழகான நண்பன்


சொல்லியது நாராசமாய்க் காதில் விழுந்தது. 'கொல்' என்ற சிரிப்பு அதற்குச் சுருதி கூட்டியது.

"அருமை ராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத்திற்குப் பலியா

னாய்?"

"மிஸ், என்னுடைய ராஜு, அந்த அருமை ராஜு, அவர் எப்போதோ இறந்து விட்டார்...'' என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல் இருக்க முடியும்?

பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். நர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த்தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைந்திருந்தன. 'கடமை, கடமை' என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.

"மிஸ்! ராஜு வந்திருந்தார். சாதாரண காய்ச்சல்தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனால்... ஆனால்... நிரம்ப வும் மாறிவிட்டார்.

"நர்ஸ் என்றால் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றொரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றிவிட்டார்.

“நர்ஸ்' என்றால் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;

"அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வையிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே - இன்று வெறி - ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி

நின்றது.

"உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினார். மற்ற நோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.

"நர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானால் ஒரு சொல், ஒரேயொரு சொல் அப்போது கூறியிருக்கலாமே. உடனே


நின்றிருப்பேன்.இன்று, நோயாளிகள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.

“நான் அவர் சொல்லியபடி எப்படி நடக்க முடியும்?”

சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னைவிட வேறுயார் நன்றாக அறிய முடியும்! அவள் என்ன சொன்னாள்? அது எனக்குத்தான் தெரியும். “மிஸ் நான் இப்படித்தான் இருப்பேன்”

“என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித்தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் நான் கற்பனை செய்ய முடியும். ஆனால்... ஆனால்... என் பழைய ராஜு எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”

அதற்குப் பிறகு கண்ணீர்தான் அவள் உள்ளக்கிடக்கையை எனக்குக் கூறியது.

அவள் இனிமேல் மணமே செய்துகொள்ளமாட்டாள். அது எனக்குத் தெரியும்.

மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக்கொள்ள மட்டும் தெரிகிறது.

ஏகம்பனாம்! ஏகம்பன்

விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற்புதமாக வருகிறது.

சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய,அறிய முற்படிமுயன்றீரா?

இப்பொழுது கவலைப்பட்டு என்ன  ஆகப்போகிறது.?





Thursday, July 1, 2021

குங்குலியக்கலைய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார்

அந்த வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஷ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது அப்கானிஸ்தானிலுள்ள ‘ஹெரத்’ என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.

'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்ட தாடி வைத்திருப்பவர் அறிவுஜீவி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது ஐ.நா வின் போதைப் பழக்கம் தடுப்புப் பிரிவில் வேலை பார்க்கிறார்.

லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை, அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துத்தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.

மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கேதான். ஆஹா! இந்தப் பெண்கள்தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத்தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ பர்தாவில் புகுந்து விடுவார்களே?

நான்தான் தொடங்கினேன். எனக்குக் கனடாக்காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹாமெலின் இந்தப் போதைப்பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன செய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை விடுமே?” என்று கேட்டேன்.


அபகானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப்பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கேதான். இவர் தனியாளாக இதை ஒழித்தும் கட்ட கொடுக்குக் கட்டிக்கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப்  பொடி போட்டு முடிக்கிற கதைதான்.


இகற்குக் கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர்

முந்திக்கொண்டு சொன்னார்: 

(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் அதை வாசகாகளுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)

பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை : 'விடக் கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டுதான். சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும். சிலருக்கு சிகரெட தேவை ; இது இல்லாமல் நடுக்காட்டில் அவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக்கொண்டு பைத்தியமாகி வாவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால்தான் கஷ்டம்."

அதற்குக் கனடாக்காரர், "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்குப் பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத்தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதைவிட முடியவில்லையே" என்றார்.

நான் சொன்னேன்: "நான் செருப்புப் போடும்போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகுதான் வலது காலைப் போடுவேன், ஷேவ் எடுக்கும்போது வலது பக்கம் செய்து பிறகுதான் இடது பக்கம். இதுவும் பழக்கம்தானே?"

ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும்போது இடது பக்கம்

குத்தி பிறகுதான் வலது பக்கம் குத்துவாள். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்.”

"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்துப் பார்த்திருக்கிறீர்" என்றார் கனடாக்காரர், கண் களைச் சிமிட்டியபடி.

அதற்குப் பிறகு சம்பாஷணை கீழிறங்கிவிட்டது; வெகு வெகு கீழிறங்கிவிட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.


நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு  - மேலே கொண்டு வருகிறீர்களா“ என்று விட்டுத் தொடர்ந்தேன்.

"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா”?

ஜெர்மன்காரர் அந்தச் சமயம், தன் பையில் வைத்திருந்த ஒரு வளைந்த போத்தலை எடுத்தார் அவர் எப்பவும் அதில் குடி வகை வைத்திருப்பார். எந்தக் காடு,மேடு,மலை சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டல் போல் காவிக்கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறு குடித்துவிட்டுச் சொன்னார்


சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி வேண்டும். அதற்குப் பிறகு ஐந்து ரூபாயை அவன் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்கி ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை.”

"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்ப திரும்பச் சாப்பிடுவேன்; களவெடுத்தும்கூட சாப்பிடுவேன் இதுவும் அடிமைப் பழக்கமா?" என்று கேட்டேன்.

அதற்குக் கனடாக்காரர் "ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்குக் குமட்டிக்கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையால் இருக்கும் வரை எடுத்துக்கொண்டே இருப்பாய்; உன் முடிவு உன் வசமே இல்லை” என்றார்.

ஜெர்மன்காரர் சொன்னார்: “இது சொல்லித் தெரிவதில்லை இந்தப் போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக்கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும். தோளிலே ஏகே 47ம் ஆக வீட்டைச் சுற்றியபடி இருப்பான்."

"அன்று கிறிஸ்துமஸ் இரவு. நானும் மனைவிஹயம வெளியே போய்விட்டு ஒருமணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். 

வீட்டின் கீழே  கண்ணாடிகள் உடைந்து சலுசலுவென்று சத்தம். கீழே ஓடிவந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."


« 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்தபடியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்.”

"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டுபோனார்கள். களவுபோனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்குப் பிறகு பொலீஸிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."

“ஒருநாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும் படி. நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு விரைந்து சென் றேன்.”

அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டியபடி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவதுபோல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்தவண்ணம் இருக்கிறது.

"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு வீடுகளில் திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறான், ஆனால், விற்றுவிட்டானாம்.”

“என் மனைவி அவன் முன்னே முழங்காலில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டுவந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்.”

“அவன் கண்களில் கண்ணீர்தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை.'

"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும்தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல்தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்டான்."

“முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால், இரண்டா வது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒருநாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக்கொண்டான். ஒரே ஒரு முறைதான். அடுத்த நாளும் எடுத்தான். அதற்கு அடுத்த நாளும் இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் இதுதான் கடைசித்தரம் என்று நினைத்துக் கொண்டான்.


கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேளை 'சிமிட்டாவுக்கு' காசு சம்பாதிப்பது எப்படி என்பதுதான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடகினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத்தொடங்கின. கடைசியில் ஒருநாள் தங்கை தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டுபோன இடத்தில் பிடிபட்டுவிட்டான்.''

"அப்பத்தான் முதல் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றாடி பொலீஸில் இருந்து. அவனைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், வீட்டுப் பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை இப்படித் தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒருநாள் தாயாரை அடித்தேவிட்டான்."

"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும்போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்.”

“நானும் மனைவியும் பெஷாவாரை விடும்போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்பக்கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை.”

"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"

ஹாமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில்தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்சிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொட விடும்."

"நான் தீக்குச்சியினால்தான் சிகரெட் பற்ற வைப்பே முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும்போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில்தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை .”

“ஒரு கோடை விடுமுறைக்காகப் பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொறொன்ரோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."

“என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதைத் தொடவே இல்லை. நான் பாக்கிய சாலி."

"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்கவேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?”

"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று. இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோருமுறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்தபடியே இருக்கிறேன்" என்றார்.

நான் சிறுவயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

“எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்றுதான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும்போதுகூட 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று சொல்லித்தான் தீத்துவார்கள்.

ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும்போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்துவிட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்துவிடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி.

சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டுதான் வருவான். அவனுடைய 'மூடைப் பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி'தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவைத் திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி, மற்றொரு நாளைக்கு அவன் தாயார், இப்படி.


கலாம் 

என்று பொட்டு வழி

 பார்கள். 

ட்டக் 

எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு

ஆரை வைகிறான் என்று வேலி வழியாலும், பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டு ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்.

எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில்தான். அவன் வீட்டுப் படலை அடுத்த ஒழுங்கை வழியாகத்தான் இருக்கும. அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்றுதான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் வீட்டுக்கூரை தெரியும்.

எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்தபடியே அக்கா அவர் சொல்லிக்கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்பப் பதினாறு, பதினேழு வயதிருக்கும்

அக்கா பாடும்போது நான் அவள் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறிமாறி தவழ்ந்து விளையாடும். அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்.

கனக சபா...பதி...தரி...சனம் 

ஒருநாள் 

கண்டால்...கலி...தி...ரும் 

ஆ......

அக்கா இந்தப் பாட்டைப் பாடுகிறாள். என் தகப்பன் மரக்கட்டிலில் சப்பணம் கட்டிக்கொண்டு இருந்து ரசிக்கிறார்.

மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி, கனகசபாபதி' என்று ஓர் இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டிய படி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக்கொண்டிருப்பதுதான் அவன் வேலை.


ஒருநாள் இந்தக் குடிகாரன் வழக்கம்போல வேட்டியை இழுத்தபடி போறான், சத்தம் போட்டுக் கத்தியபடி எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காது கொடுத்துக் கேட்டபடியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறைபோலும். குடிகாரன் சொல்கிறான்:

"அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கேப்பாரில்லையா?"

அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு டார். கொஞ்ச நாள் பிறகு பாட்டுக்காரரையும் வேண்டாமென்றுவிட்டார்.

இப்படித்தான் ஒருநாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக்கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்குப் போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல், பிறகுதான் உருவம் தெரிகிறது. வழக்கம்போலச் சத்தம் போட்டு பேசியபடியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டுவிட்டு உள்ளுக்கு ஓடிவிட்டேன்.

அவன் வீட்டுக்குப்போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலேதான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க் கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்.

ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம், அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடுதான் படிக் கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத் தான். அவன் அரைவாசி சாப்பிட்டுவிட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டுபோய்க் கொடுப்பான்.

“என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சுப் போட்டு வாறாய்?”

"ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறேனே?” இது அவன்.

"மூன்று நாள் பிள்ளைகளுக்குச் சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?”

எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?

"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் படுங்கி 'ரப்பிலே' செருகிவிட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."

"எடுத்துக் குட்டி, எடுத்துக் குட்டி"




காலால் அவளை உதைக்கிறார்.

மனிதனுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்ச நேரம் அமைதி. ஊர் முழுக்கக் காதைக் கூர்மையாக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

அம்மாதான் முதலில் பார்த்தாள், வீட்டுக் கூரை  டங் கென்று ஒரு கணம் ஆடியதை "ஐயோ, இஞ்சருங்கோ என்னெண்டு போய்ப் பாருங்கோ" என்று கத்தினாள் அம்மா

"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும், கிணத்தைத் தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்ன ராக உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்குப் போறான் பிறகு அம்மா ."

நாக்கு வெளியே நீண்டுவிட்டது. ராசக்கா முகட்டில் இருக்க ஒரு சேலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்துக் கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒருகணம் பிந்தியிருந்தால் மரணம்தான்.

சின்னத்தம்பிக்கு வெறி முறிந்துவிட்டது. தலையில் கை வைத்தபடி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துகத்தென்று கத்துகிறார்கள்.

கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.

"ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ இந்தச் சனியனை இனி நான் தொடமாட்டேன். இது சத்தியம்” என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

முதல் நாள், வேட்டியைக் கட்டியபடியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத் தம்பி, இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதேதான்.

அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருந்தி விட்டான் என்று .

நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக் கொண்டே வாறான்.

"விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது. என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க!

கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மெளனம் பிறகு கனடாக்காரர் சொன்னார்.


‘“இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால், அதை வெளியேற்றுவதுதான் மிகவும் சிரமம்.”

"அதிலும் நோய் விலகும் அறிகுறிகள் (withdrawal Symptoms) அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனைதான். இதிலே மீள்வது மிகவும் அரிது” என்றார் ஜெர்மன்காரர்.

அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation Centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால், பத்திலே ஒருவர்தான் மீண்டு வருவார்கள்.

“எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆப்பிரிக்காவில் நான் வேலை செய்தபோது அந்தப் பரிச்சயமேற்பட்டது” என்று நான் கூறினேன்.

அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனி. ஆப்பிரிக்காவின் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்ப்யூட்டர் பிரிவில்தான் நான். எனக்குக் கீழே நாற்பது பேர்.

அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக்கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும்தான்.

கம்ப்யூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால், அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவதுபோல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு சொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங் களைக் கற்றுக்கொண்டு விடுவான்.

நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத் துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்.

இரவு பகலாகக் கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டி ருந்தது. அப்போதுதான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது.


இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு ஊற்றிக்கொண்டார். நான் தொடர்ந்தேன்.

அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சு தான். அதிலே ஒரு நீலக் கண் அழகி, பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்.

பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஓர் ஆணை வலையில் வீழ்த்தி இழுத்துக்கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத்தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் ஒருவித குடிவகையைச் சிறு சிறு ‘பொலிதீன் பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்து கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்த வுடன் இன்னும் கேட்கும். கொடுத்துக்கொண்டே இருக்க வேணும்.

கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக்கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கிவிட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.

ஆப்பிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டும் விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்.

ஒருநாள் அவன் என்முன்னே நிற்கும்போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம் அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது.

ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒருசிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் ப்ரோகிராம் விபரங்கள்; இந்தக் கம்ப்யூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில் இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்பு கள்தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டுவிட்டேன்.

இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்குக் கிலி பிடித்துவிட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக்கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடிவிட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்திவிட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால், நான்தான் கடைசி.

அப்பத்தான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பி வைத்தேன். எனக்கு அவன் மீது அன்புதான் சுரந்தது. கோபம் வரவில்லை . அவன் எவ்வளவு ஓர் இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின.

நான் ஒபுக்குவை மறந்தே விட்டேன். ஆனால், ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

ஐயா,

உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்ப் யூட்டர்தான் இன்று எனக்குச் சோறு போடுகிறது.

நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்துவிட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறாள்.

ஒபுக்கு . இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாக விருந்தது.

ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றிவிட்டு மறுபடியும் போத்தலைப் பையிலே வைத்தார்.

"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படிச் செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்” என்றேன்.


ஜெர்மன்காரர், "ஆமாம், இன்று இதுதான் கடைசித் தடவை நாளை விடியும் வரை” என்றார்.

நாங்கள் சிரித்தோம்.

மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் – என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை, வாலுமில்லை . குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே என்று கேட்டான்.

"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா என்று கேட்டேன்.

"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்” என்றான்.

"திருக்கடவூரிலே சுவாமிக்குத் தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்துக் குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்டபடியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.

"ஒருநாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியைக் கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார், ஆனால், வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறிகொடுத்தார்.”

"தன் வயமிழந்து, மதிமயங்கி, தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய அவன் காலில் விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியைப் பெற்றுக்கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசியை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்.''

"இது என்னத்தைக் காட்டுகிறது ?" என்றேன். "அவருடைய பக்தியைத்தான் " என்றான் நண்பன்.

"இல்லை , இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction)தா என்றேன் நான்.










Tuesday, June 29, 2021

ஐந்தாவது கதிரையும் ஜெயமோகன் அரசியலும்

 ஐந்தாவது கதிரை  

(கதிரை என்றால் நாற்காலி)

ஆந்தை பகலில் வெளியே வந்தால் அதிலே ஒரு விசேஷம் இருக்கும். அப்படித்தான் தங்கராசா இன்று வெளியே புறப்பட்ட கம். பத்மாவதியைச் சமாதானப்படுத்துவதற்கான இன்னொரு முயற்சி. ஒரு சதுரமைல் பரப்பைக்கொண்ட அந்த மா அங் காடியில் கிடைக்காத பொருட்களே இல்லை. விநோதங்களுக்கும் களியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு தடவையும் பத்மாவதியை இங்கே கூட்டிவரும்போது அவள் சிறு பெண்ணாக மாறி பரவசமாகிவிடுவாள்.

எல்லாம் ஒரு கதிரையால் வந்த கஷ்டம்தான். உப்பு பெறாத சமாச்சாரம். இன்றைக்கு இவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டது. அவள் பிடித்த பிடிவாதமாக இருக்கிறாள். இதிலே விட்டுக்கொடுத்தால் அவ்வளவுதான். இனி அவரை ஒரு சதக்காசுக்கும் மதிக்க மாட்டாள்.

இந்தக் கதிரை காஷ்மீரத்தில் செய்யப்பட்டு, ஏற்றுமதியாகி கனடாவில் விற்பனையானது. கம்பளத்துக்கு அடுத்தபடி காஷ் மீரில் பேர்போனது இந்த வால்நட் மரம்தான். பதப்படுத்தப்பட்ட மரத்தில் செய்த இந்தக் கதிரை சாதாரணமானதில்லை. ஒரு ராஜ பரம்பரையை உத்தேசித்தும், அசௌகரியத்தை மனதில் கொண்டும் படைக்கப்பட்டது. நுணுக்கமான மரவேலைப்பாடுகள் கைப்பிடிகளிலும் கால்களிலும் முதுகு தாங்கியிலும் காணப் பட்டன. இளநீல வர்ண வெல்வெட்டில் மெத்தைகள் அலங்கரித்தன. ஏறியிருந்தால் கால்கள் கீழே தொங்கும். அந்தக் கதிரைதான் வாங்க வேண்டுமென்று அடம் பிடித்தாள் இந்தப் பத்மாவதி.

அவர்கள் வீட்டிலே நாலு கதிரைகள்தான் இருந்தன. மெத்தை வைத்து, மண்புழு கலரில் ஊத்தை தெரியாமல் இருப் பதற்கும், நீண்டகால பாவனைக்குமாக வாங்கப்பட்டவை. ஒன்று இணை சோபா, மற்றவை துணைசோபாக்கள். இவர்கள்

மனக்கணக்கு தாண்டி ஓர் உபரி விருந்தாளி வந்துவிட்டால், இருப்பதற்கு சமையல் கட்டிலிருந்து கதிரை எடுத்து வரவேண்டும் அவமானம். அதுதான் அவள் இந்தக் கதிரையில் மிகவும் ஆர்வமாய் இருந்தாள். அதனுடைய விலைகூட அவளுடைய ஒரு வாரச் சம்பளத்திலும் குறைவுதான் என்று குத்திக்காட்டினாள்.

தங்கராசாவும் பிடிவாதமாக இருந்தார். சண்டை என்று வந்தால் இறுதியில் சரணடையும் பெருமை அவருக்குத்தான். ஆனால், இம்முறை அவர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. தன் கைவசமிருந்த யுக்திகள் சகலத்தையும் கையாண்டு தன் அதிகாரத்தை நிலைநாட்டவே தீர்மானித்திருந்தார்.

ஆனால், பத்மாவதி இவரைவிட பெரிய சூழ்ச்சிக்காரியாக இருந்தாள். அவள் தன்னிடமிருந்த மிகச் சிறந்த படைக்கலத்தைப் பிரயோகிப்பதற்குத் தருணம் பார்த்திருந்தாள். அதைச் செய்தால் அவர் நிர்மூலமாகிவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும். அவள் துணிச்சல்காரி, செய்தாலும் செய்வாள்.

அவளுக்கு அப்போது பதினாலு வயது இருக்கும். பள்ளிக் கூடத்துக்கு வெள்ளைச் சீருடையில் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவளோடு பல மாணவிகள் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே சைஸ் பெண்கள். அப்போது ஒரு வண்டிக்காரன் வண்டியில் சிமென்ட் மூட்டை ஏற்றிவிட்டு ஓர் ஒடிசலான மாட்டைபோட்டு அடித்துக்கொண்டிருந்தான். அது கால்களைப் பரப்பிவைத்து மூச்சிரைக்க நுரை தள்ளி நின்றது.

பேசிக்கொண்டு போனவள் திடீரென்று திரும்பி வண்டிக்காரனிடம் வந்து அவன் திகைத்தபடி பார்க்க அவனுடைய துவரங்கம்பைப் பிடுங்கினாள். நடுவீதியில் முறித்து எறிந்தாள். பிறகு வந்தமாதிரியே போய் சிநேகிதிகளுடன் கலந்துகொண்டாள். இவ்வளவும் செய்ய சரியாக அவளுக்கு இருபது விநாடிகள் எடுத்துக்கொண்டன. சிநேகிதிகளுடன் சேர்ந்தபிறகு அவள் ஒரு தரம்தானும் வண்டிக்காரனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

இது அவள் சுபாவம். தங்கராசா இவளிடம் மனதைப் பறிகொடுத்ததற்கும் இந்தத் துணிச்சல்தான் காரணம். அகதியாக கனடாவில் வந்து இறங்கிய பிறகு அவர் செய்த முதல் வேலை முகவர் மூலம் அவளையும் எடுப்பித்ததுதான்.

அவர்கள் கல்யாணம் கோயிலில் கோலாகலமாக நடந்தது. பிளாஸ்டிக் வாழைமரம், அசல் அம்மிக்கல், இருந்து வாசிக்கும் நாயனக்காரர், நின்று வாசிக்கும் நாயனக்காரர் (இவருக்கு சார்ஜ் கூட)

யாளி வைத்த மணவறை, வானத்தில் பறந்து வந்த ஆழ்குளிரில் இருந்து எழுப்பிய மாவிலைகள், பால் ரொட்டி,  பயத்தம் பணியாரம் போன்ற அபர்வமான பலகாரம் எல்லாம் தவறாமல் பங்கேற்றன.  வீடியோ புகழ் ஜகன்னாதா குருக்கள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திவைத்தார்.

 

சேலை கட்டுவதில் அவள் தேர்ச்சி பெற்றவள் அல்ல. சிரத்தை இல்லாமல் உடுத்திக் கவனமின்றித் தாவணியை விசிறி இருப்பாள். இந்தச் சேலையில் சிலபேருக்கு உடல் அழகு பிரமாத வெளிப்படும். இன்னும் சிலருக்கு அழகு அமுங்கி வெகு சாதாரணமாகி விடும். இவள் இரண்டாவது வகை மிகச் சாதாரண உல்வாகுபோன்ற தோற்றம். தவிட்டு நிறமாக இருந்தாள்.

கண்கள் ஏமாற்றும் என்பதை முதன் முதலில் தங்கராசா அனுபவித்தது அப்போதுதான். நாணம், பயம் என்பது அவளுக்குத் துளியும் கிடையாது. போலியில்லாமல் மிக இயல்பாக இருந்தாள். இதுதான் அவருக்குப் பிடித்தது. பிடிக்காததும் இதுதான்.

அன்று இரவு தங்கராசாவுக்குப் பல ஆச்சரியங்கள் காத் இருந்தன. அவள் புஜங்கள் ஒரு மல்யுத்த வீராங்கனையுடையது போல இறுக்கமாகவும், மினுமினுப்பாகவும் இருந்தன. திடீரென்று தோன்றிய மார்புகள் மிக உருண்டையாகவும், முதலையின் அடிப் பாகம்போல வெண்மையாகவும் காணப்பட்டன. ஒரு மரம் ஏறியின் வயிறுபோல அவள் வயிறு ஒட்டியிருந்தது. பெண்மையைப் பற்றி அவர் இரவிரவாகச் சிந்தித்து வைத்திருந்த சித்திரம் எல்லாம் உடைந்துவிட்டது. அது அவருக்கு மிகவும் உவகை தருவதாக இருந்தது.

அவள் முயங்கும்போது முழுமூச்சோடு முயங்குவாள் தன்னை மறந்த நிலை. உலகை மறந்த சுகம். கைகளும் கால்களும் மாறுபட்டு யாருடைய கால்கள், யாருடைய கைகள் என்று தெரியாத குழப்பமான நிலை. கண்களை மூடி அனுபவிப்பாள்.

அந்த நேரங்களில் எல்லாம் இவருக்குத் தோன்றும் இந்த மனித உடம்பு பிணையலுக்கு ஏற்றது இல்லையென்று. இந்தக் கையும் காலும் வேண்டாத இடங்களில் வந்து இடைஞ்சல் கொடுத்தபடியே இருக்கும். பாம்பின் உடம்பு ஒன்றுதான் கூடலை மனதில் வைத்துப் படைத்த ஒரே உடம்பு, சுருண்டு, பிணைந்து,நெளிந்து தேக சம்பந்தம் கொள்ள இந்த அற்ப மானுட - உடல் சாத்தியமற்றது என்று ஆதங்கப்படுவார்.

அநேக நாட்களில் இந்த வேகத்தில் ஒரு விபரீதம் நடந்து விடும். அவள் கால் சங்கிலிகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மாட்டிக்கொள்ளும். பாதி இரவில் இது அடிக்கடி நடந்து விடுவது அவருக்கு வேடிக்கையக இருக்கும். அவள் பரிதாபமாக “ஐயோ கொழுவிப் போச்சு, இதைக் கழற்றி விடுங்கோ” என்று மன்றாடுவாள். இவர் அந்த தவிப்பை கொஞ்சம் நேரம் நீடிக்க விட்டு ரசிப்பார். ஓரங்களில் வெளிறிப் போய் இருக்கும் அந்தப் பாதங்களைத் தடவியபடியே கால் சங்கிலிகளைக் கழற்றுவார். வெகு நேரம் கழற்றுவார்.

இதெல்லாம் ஆரம்ப காலங்களில். பிறகு புத்தி வந்து இரவு வேளைகளை முடித்து விட்டு சயனத்திற்கு வரும்போது கால் சங்கிலிகளைக் கழற்றி வைத்துவிடுவாள். அதற்குப் பிறகு அதுவே ஒரு சைகை ஆயிற்று. சில நாட்களில் அவளே கொலுசைக் கழற்றி வைத்து விட்டு சிரித்துக் கொண்டே வருவாள். அவருக்குப் புரிந்துவிடும். தயாராக இருப்பார். சில நேரங்களில் கொலுசைக் கழற்றாமல் ”சிலுங் சிலுங்” என நடந்து வந்து படுக்கையில் தொப்பென விழுந்து விடுவாள். அன்று விடுமுறை.

மகள் பிறந்த பின்னும் இது தொடர்ந்தது, அதுவே ஒரு சங்கேத வார்த்தையாக உருவெடுத்தது.

அதுவும் பழைய கதை. இப்ப அவள் கால் கொலுசைக் கழற்றிவதே இல்லை. அவள் மனதில் என்ன நடக்கிறது என யாருக்குத் தெரியும். வெங்காயம் வெட்டுவது போல முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக் கொண்டுதான் பேசினாள். இப்போதெல்லாம் அவரை அண்டுவதற்கே அவள் கூசுவது போலத்தான் பட்டது.

இங்கு வந்த பின் அவள் குதிகால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் மறையவே ஆறுமாதம் எடுத்தது.  ஆனால் அடியோடு மாறுவதற்கு ஆறு மாதம் கூட எடுக்கவில்லை..  கனடா அவளுக்கு சொர்க்க லோகமாமகப் பட்டது.. மற்றவர்களைப் போல இல்லாமல் குளிரை மிக அலட்சியப்படுத்தினாள்.. வாழ்னாழ் முழுதும் அங்கேயே பிறந்து வாழ்ந்ததைப் போல ஒரு விதத் தடங்கலும் இன்றி உற்சாகத்துடன் அந்த நீரோட்டத்தில் கலந்து ஐக்கியமானாள்..

தங்கராசா இன்னமும் பழக்க தோசத்தில் உலர் சலவை சேட்டை உதறிப் போட்டும், காலணிகளை அதிகாலை வேளைகளில் கவிழ்த்துப் பார்த்தும் போட்டுக் கொண்டு இருக்கையில் பத்மாவதி லீவாய் ஜீன்சும் வாசகம் எழுதிய் ரீசட்டும் 

 

 

அணிந்து, சீராக வெட்டிய குட்டை மயிர் காதைத் தொட, தானாகவே சுவாசிக்கும் நைக்கி காலணியில் சுப்பர் மார்க்கட்டில் சாமான்  வாங்கிவிட்டு கடன் அட்டையில் கணக்கு தீர்த்துக் கொண்டிருந்தாள்.

கனடா வந்து ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு இவருக்கு கம்பியுட்டர்நிரல் எழுதும் வேலை கிடைத்தது. இவர் திறமையான வேலைக்காரர். இவர் நிரல்களைப் பூச்சி அரிப்பதில்லை. ஒருக்கால் எழுதினால் எழுதினதுதான். அதைச் சரி பார்க்கவேண்டிய ..அவசியமேயிராது. ஆனாலும் இவர் மேசைக்கு வரும் கோப்புகள் நத்தை வேகத்தில்தான் நகர்ந்தன. அதனால் ஒருநாள் வேலை போய்விட்டது.

வேலை போனபின் வீட்டிலேயே சுவாசித்துக்கொண்டு இருந்தார். அதுவரையில் சாதாரண தவறுகளையே செய்து பழகி இருந்தவர் பத்மாவதி தந்த துணிச்சலில் ஒரு மாபெரும் தவறைச் செய்ய நேரிட்டது. ஒரு தொழிற்சாலையில் வேலை ஒன்று காலியாகவிருந்தது. அவளை அதில் சேர அனுமதித்தார். அப்பொழுது அவர் கையை விட்டுப்போன ஆட்சியை அவர் இன்னமும் திருப்பிக் கைப்பற்றவில்லை. அவருக்கு வேலை கிடைத்தபிறகும் அது அவளிடமே தங்கிவிட்டது.

பத்மாவதி வேலை செய்யும் இடத்தில் பல தென் அமெரிக்க பெண்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் இவளுடன் நல்ல சிநேகம். இவளுடைய உடை, கலர், தோற்றம், தலைமயிர் இவற்றைப் பார்த்தவர்கள் இவளைக் கொலம்பியன் என்றோ, கொஸ்டாரிக்கன் என்றோதான் நினைத்தார்கள். அவர் களைப்போல உடுக்கவும் நிற்கவும் நடக்கவும் பல் குத்தவும் பழகிக்கொண்டாள். பஸ் தரிப்பு நிலையங்களில் யாராவது அவளிடம் ஸ்பானிஷ் பாஷையில் பேசிவிட்டால் பரவசமாகி விடுவாள்.

பதினாலு வயதில் அவளுக்கு மகள் இருப்பதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஒருநாள்பாலே' வகுப்பில் சந்தித்த ஓர் அம்மாஇது உங்கடை தங்கச்சியா?' என்று கேட்டு விட்டாள். பத்மாவதி அன்று முழுக்க மிதந்தபடியே இருந்தாள். கணவரிடம் இதைத் திருப்பித் திருப்பிச் சொன்னபோது அவருடைய பயம் இன்னும் அதிகரித்தது.

சங்கேத பாஷை நாட்களில் அவர்களுக்கிடையே எவ்வளவு இருந்தது. 'பத்மாவதி' என்று முழுப்பெயரும் கூறி அழைத்தால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

 

 

பிரியமாக இருக்கும்போது 'பத்து' என்று அழைப்பார் முன்னிலையில் 'பத்மா' என்றே கூப்பிட்டு பழக்கம் படுக்கை அறையில் மாத்திரம் விஷயம் வேறு. 'பத்தூஉம் என்று அளபெடைத்தொடரில் அழகு குறையாமல் அழைப்பார்…

அதெல்லாம் மறந்து இப்போது பல வருடங்கள் ஆகி விட்டன.

கடைசியில் இந்தக் கதிரைப் போராட்டத்தில் வந்து நின்றது இதில் அவர் வெகுதீவிரமாக இருந்தார். அவர் அறியாமல் அவள் கதிரை வாங்கினால் அதைத் துண்டுதுண்டாக உடைத்துவிடுவதாக சபதம் எடுத்திருந்தார். இது இறுதிப் போராட்டம். இதில் தோற்றால் அவள் அவரைச் சுத்தமாக மட்டம்தட்டி வீட்டின் நிலவறையில் பழைய தளபாடங்களுடன் போட்டுவிடுவாள் என்பது அவருக்கு நிச்சயமாயிருந்தது.

மகளும் இவளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டாள். வாய்க்கு ருசியான உணவு சாப்பிட்டு வருடக்கணக்காகிறது. தோசை, இட்லி, வடை, அப்பம் போன்ற சமாச்சாரங்களுக்கு ஒரேயடியாக விடுதலை கொடுத்துவிட்டாள். பேர்கர் என்ற பேயும், பிஸா என்ற பிசாசும் வீட்டிலே தலை விரித்து ஆடின. தினம் இந்தச் சாப்பாடு சிவப்பு பூப்போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பில் பரப்பப்பட்டு, பழைய புதினப் பேப்பரால் மூடப்பட்டு கிடக்கும். அதன் மணம் வயிற்றைக் குமட்டும். ஒருநாள் இட்லி வேண்டுமென்று கேட்டதற்கு அவள் இப்படி வெடித்தாள் :

"புளித்த மாவில் அவித்த இட்லி சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட தோசை சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட வடை சாப்பிட்டு, புளித்த மாவில் செய்த அப்பம் சாப்பிட்டு பழகிய உங்களுக்குப் புளித்துப்போன சிந்தனைதான் இருக்கும். நான் சும்மாவா இருக்கிறேன். நாலு மணிக்கு எழும்புறன். சமைச்சுப் போடுறன். வீட்டைப் பார்க்கிறன். உங்களைப்போல சமமாய் வேலைக்குப் போய் உழைச்சுக்கொண்டு வாறன். ஒரு குமரைக் கட்டி வளர்க்கிறன். நீங்கள் பியர் குடித்துவிட்டு கால் விரியக் கிடக்கிறியள். ஆறு மாதமாய் குக்கர் வேலை செய்யவில்லை. நீங்கள் என்றால் போய் ரிமோட் கொன்ரோல் வாங்கிறியள். நான் ஒரு நாளைக்க என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது.”

அவள் அப்படி அரற்றியதற்குக் காரணம் இருந்தது. சமையலறையில் பத்மாவதியின் சமையலடுப்பில் மூன்று எரிவாய்கள் எரியவில்லை. ஆறுமாதமாக ஒரு எரிவாயை வைத்து சமாளித்து வந்தாள். எவ்வளவு சொல்லியும் அதை மாற்றவேண்டும் என்றஎண்ணம் தங்கராசாவுக்கு வரவில்லை . அவளுக்கு துக்க எரிச்சல் எரிச்சலாக வந்தது. அந்த எரிச்சலைச் சமாளிப்பதும் அன்றைய சுற்றுலாவின் அம்சம். அவள் முன்னால் நடந்துகொண்டிருந்தாள். வாக்கு இருந்து பார்க்கும்போது அசல் அப்படியே ஒரு கொஸ் எக்கன் பெண்போலவே இருக்கிறாள். அவளிடம் எவ்வளவுக் கவர்ச்சி இருந்ததோ அவ்வளவுக்கு இப்போதெல்லாம் கடுமை சேர்ந்து கொண்டது. வீடு அவர்கள் பெயரில் இருக்கிறது. பட்டுக் கடனை இவர் அடைத்து வருகிறார். இந்தத் தேசத்து சட்டங்கள் மனைவிகளுக்கு அனுகூலம். இவளிடம் எச்சரிக்கை பாக இருக்கவேண்டும் என்று மனது கட்டளையிட்டது.

எதிர்வருவோர் இவளை இரண்டுதரம் பார்த்துவிட்டு நகர்ந்தார்கள். ஜீன்ஸும், முடிச்சுப்போட்ட மேற்சட்டையும் அணிந்திருந்காள். வார் இழுத்துக்கட்டிய மத்தளம்போல வயிறு ஒடுங்கி இருந்கது. இவரை விட்டுப் போவதற்கு அவசரம் காட்டுவதுபோல அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு சோற்றுப் பிராணிபோல இவர் அவள் பின்னாலே விட்டுவிடுவாளோ என்ற அச்சத்துடன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.

ஒரு சைனாக்காரன் பச்சை குத்திக்கொண்டிருந்தான். வாட்ட சாட்டமான வெள்ளைக்காரன் ஒருத்தனுடைய முறுக் கேறிய புஜத்தில் டிராகன் ஒன்றை வரைந்தான். இந்த அதிசயத் தைக் கண் கொட்டாமல் இருவரும் நின்று பார்த்தார்கள். நீண்ட புடலங்காய்போல வலுவோடு இருக்கும் இவள் புஜங்களை மெல்லக் கையினால் வருடி இறுக்கிக்கொண்டார். அது இரவுக் கான சமிக்ஞை என்பது அவளுக்குத் தெரியும்.

அழகு சாதனக் கடைக்கு அவளைக் கூட்டிப்போனபோது அவள் முகம் பிரகாசமானது. அவள் கேட்ட கண் மை, முகச் சாந்து, நக வர்ணங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். உதடுகளுக்கு, கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு அவள் தெரிவு செய்த பளபளக்கும் கபில நிறத்துக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட பெயர் தெரியாத ஒரு வர்ணத்தை வாங்கித் தந்தார். உடனேயே அதைப் பூசிக் காண்டாள். ஒரு சிறு பூச்சில் அவளுடைய உதடுகள் குவிந்துமிகக் கவர்ச்சிகரமாக மாறின.

உணவகம் ஒன்றைக் கடந்தார்

இந்தச் சந்தோசத்தை அவர் கலையவிட விரும்பவில்லை. உணவகம் ஒன்றைக் கடந்தார்கள். அவளுக்கு 'சன்டே' மிகவும் பிரியமானது. வேண்டுமா என்று கேட்டார். அவள் சிணுக்கமாகித் த்தாள். அவ்வளவுதான். இலச்சினை மோதிரம்கிடைத்த வந்தியத்தேவன்போல ஒருவித உற்சாகத்துடன் பட்டார். மூன்று குவியல் ஐஸ்கிரீம், உருகிய சொக் பாலாடை, மேலே மகுடமாக சிவந்த செர்ரி பழம் இவற்றுடன் திரும்பினார். ஓர் அரை ஆள் உயரத்துக்கு அது இருந்த சொக்லட் நிற உதடுகளை நாக்கினால் தடவியபடி சாப்பிடத் தொடங்கினாள்.அவள்

திரும்பும்போது மெல்லிய குளிர் காற்றின் உராய்வுத் தன்மை அதிகமாயிருந்தது. எதிர்ச்சாரியில் கார்கள் விரைந்தன . படகுகளை இழுத்துக்கொண்டும், வீடுகளைத் தொடுத்துக்கொண்டும் ஓடின. இன்னும் சில சைக்கிள்களைத் தாங்கிக்கொண்டு பறந்தன. இனிமையான விடுமுறையின் அதிர்வு எங்கும் சூழ்ந்திருந்தது. தங்கராசா மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

இவ்வளவு செய்தும் அன்றிரவு அவருக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. வெறும் ஐஸ்கிரீமைக் காட்டி அவளை மயக்கமுடியாது என்று அப்போது கண்டுகொண்டார். ஒரு கிருமி நோய்க்காரர்போல அவரை ஒதுக்கினாள். திமிறியபடி தள்ளித் தள்ளிப் போனாள். சவுக்கால் அடிக்கப்பட்டதுபோல தங்கராசா டிவியின் முன்னால் விழுந்தார். படுக்கை அறைக்கு அன்று அவர் திரும்பவே இல்லை.

அடுத்தநாள் காலை பத்மாவதி பதினாலு காலி பியர் டின்களை வரவேற்பறை முழுக்கவும் தேடித்தேடிப் பொறுக்கினாள்.

கடந்த இரண்டு வாரமாக அந்த வீட்டில் ஒரு மௌனம் சூழ்ந்து போய் கிடந்தது. ரகஸ்யமானதும், சதித்திட்டம் கொண்டதுமான ஒரு யுத்தம் அங்கே உருவானது. புறங்கை வீச்சில் வீங்கின உதடுகளைச் சாமர்த்தியமாக உதட்டுச் சாயத்தினால் மறைத்திருத்தாள். தங்கராசா தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை, மற்றவர்களிடம் பகிரமுடியாத ஒரு அவமானத்தை, அவருக்குத் திருப்பித் தருவதற்கு சமயம் பார்த்திருந்தாள்.

நாமகள் மகா வித்தியாலயத்தில் படித்த பெண், ஒரு சொட்டு ஆங்கில வாசனையும் அறியாதவள், சித்திரக்கதை புத்தகத்தைத் தாண்டி வராதவள், back space விசையை ஒடித்துவிட்டு கம்பியூட்டர் நிரல் எழுதும் வல்லமை படைத்த தங்கராசாவுக்கு இப்படி ஒரு சவாலாக வந்து வாய்த்திருந்தாள்.

 

தங்கராசா தான் பேராபத்தில் இருப்பதை உணர்ந்தார்.போரின் விளைவுகள் அவருக்குச் சாதகமில்லை என்பதும் தெரிந்தது.

 

எப்பாடு பட்டும் அவளைக் கனியவைத்து வழிக்குக் கொண்டு வர் வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். களில் கம்ப்யூட்டர் நிரல் எழுதும் ஒரு திட்டத்துடனும் அவர் இறங்கினார்.

 

அன்று இரவு உணவு சாப்பிடும்போது இது தொடங்கியது.

காதல் நாட்களில் செய்த சைகைகள், சங்கேத பாஷைகள் எல்லாம் பரிமாரப்பட்டன. மகளுக்குப் புரியாதவாறு ஒரு முழு சம்பாஷனை உணவு மேசையில் நடந்து ஒப்பேறியது.

அவள் பாத்திரம் அலம்பும்போது இவர் பூனைபோல அடி வைத்துப் போய் பின்னே நின்றுகொண்டார். கைகள் கட்டிப் நிலையில் பின்னாலிருந்து அவள் இடையை ஸ்பரிசித்தார். அவள் மறுப்பு சொல்ல முடியாமலும் தடுக்க இயலாமலும் நெளிந்தாள். இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை

அவள் ஒருவித அவசரமுமில்லாமல் தன் வேலைகளை அது வேண்டுமென்றே நேரம் கடத்துவதுபோலத்தான் இருந்தது. ஈரப்பதம் எந்திரத்தை இசையவைத்தாள். பிறகு பூட்டுகள் சரிபார்க்கும் சத்தம். இப்பொழுது படிகள். அலாரம் சிஸ்டத்தில் ரகஸ்ய எண்கள் பதியும் ஒலி. விளக்குகள் அணைந்தன. இதோ வந்துவிட்டாள்.

மெதுவாகக் கதவு திறக்கிறது. இன்றும் கால் கொலுசைக் கழற்றி வைக்கவில்லை. சத்தம் வரக்கூடாதென்று வெகு பிரயத்தனம் நடக்கிறது. கால்களைப் பக்கவாட்டில் நுழைத்து நகர்த்தி நகர்த்தி வருகிறாள். இவர் துடிதுடிப்பானார்.

அவ்வளவு அவசரம் அவருக்கு. அவள் மேலங்கியைப் பிடித்து இழுத்தார். "வேண்டாம், இன்றைக்கு வேண்டாம். நீங்கள் கோவிப்பியள்என்று அவள் கத்தினாள். அவர் கேட்பதாயில்லை. ஓர் உத்வேகம் வந்துவிட்டது. அவசரத்தில் அவர் இழுத்தபோது பட்டன்கள் தெறித்தன. அப்படியும் அவள் ஒரு பொக்கிஷத்தை காப்பதுபோல சட்டை விளிம்புகளை இழுத்துப்பிடித்தபடி எதிர்ப்புக்காட்டினாள்.

இப்பொழுது அவர் எல்லை கடந்துவிட்டார். ஆவேசம் வந்து வலிந்து இழுத்தார். அது பிரிந்தது. தளும்பல் குறைவில்லாதமார்புகள்.

ஆனால், அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது.

 

அவளுடைய இரண்டு மார்புகளிலும் பச்சை குத்தி இருந்தது அந்த சைனாக்காரனின் டிராகன்கள் வாயை கொண்டு உறுமின. ஒரு பென்சில்கூட இடையில் புக முடியாத நெருக்கமான மார்புகள், தன்னுடைய சொந்தப் பாவனைக்காகப் படைக்கப்பட்டவை என்று நினைத்திருந்தவை, யாரோ ஊர் தெரியாத நடைபாதை சைத்திரீகன் வரைந்த ஓவியங்களின் தாங்காமல் ஆடின.

இருண்ட வனத்திலே பதுங்கியிருந்த மிருகம் ஒன்று தாக்கியதுபோல உணர்ந்தார். மெல்ல பலமிழந்து சரிந்தார்

அவள் மறுபடியும் கைகளினால் சட்டையை - மூடிக்கொண்டாள். கடைவாயில் ஒரு சிரிப்பு தோன்றி' * கணத்தில் மறைந்தது. இவர் கவனிக்கவில்லை .

இதுதான் அவர்களுடைய கடைசி சமர். இந்த வெற்றிதான் அவளுடைய கடைசி வெற்றி. இதற்குப் பிறகு அந்த வீட்டில் கதிரை வாங்கும் கதை எழும்பவே இல்லை. அவர்தான் இப்ப ஐந்தாவது கதிரை.